Sriman Narayaneeyam - Dasaka 53 - தேனுகாசுரன் வதம் (ச்லோகம் 537)

Dasaka 53 - தேனுகாசுரன் வதம்

அதீத்ய பால்யம் ஜகதாம் பதே த்வம் உபேத்ய பௌகண்ட வயோ மநோஜ்ஞம் உபேக்ஷ்ய வத்ஸாவநமுத்ஸவேந ப்ரவர்த்ததா தோ கண பாலநாயாம் அதீத்ய பால்யம் ஜகதாம் பதே த்வம் உபேத்ய பௌகண்ட வய: மநோஜ்ஞம் உபேக்ஷ்ய வத்ஸாவநம் உத்ஸவேந ப்ரவர்த்ததா தோ கண பாலநாயாம் अतीत्य बाल्यं जगतां पते त्वमुपेत्य पौगण्डवयो मनोज्ञम् । उपेक्ष्य वत्सावनमुत्सवेन प्रावर्तथा गोगणपालनायाम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உலகின் பதியே! நீ உனது ஐந்தாவது வயதைக் கடந்து, பௌகண்டம் என்னும் பருவத்தை அடைந்தாய் (6 முதல் 10 வயது). அப்போது கன்றுகளை மேய்ப்பதை விடுத்து, மாடுகளை மேய்த்து, அவற்றைக் காக்கும் முயற்சியில் ஆவல் கொண்டாய்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-15-1 முதல் x-15-16 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.