Sriman Narayaneeyam - Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல் (ச்லோகம் 535)
Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல்
நாராயணாக்ருதிமஸங்க்யதமாம் நிரீக்ஷ்ய ஸர்வத்ர ஸேவகமபி ஸ்வமவேக்ஷ்ய தாதா மாயா நிமக்ந ஹ்ருதய: விமுமோஹ யாவத் ஏகோ பபூவித ததா கபலார்த்தபாணி: நாராயண ஆக்ருதிம் அஸங்க்யதமாம் நிரீக்ஷ்ய ஸர்வத்ர ஸேவகம் அபி ஸ்வம் அவேக்ஷ்ய தாதா மாயா நிமக்ந ஹ்ருதய: விமுமோஹ யாவத் ஏக: பபூவித ததா கபல அர்த்த பாணி: नारायणाकृतिमसंख्यतमान्निरीक्ष्य सर्वत्र सेवकमपि स्वमवेक्ष्य धाता । मायानिमग्नहृदयो विमुमोह यावथेको बभूविथ तदा कबळार्धपाणिः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக எண்ணற்ற நாராயண உருவங்களையும், ஒவ்வொரு நாராயணனுக்கும் தான் சேவகனாக நிற்பதையும் நான்முகன் கண்டு, மீண்டும் செய்வதறியாது மயங்கி நின்றான். அவன் மீது பரிதாபம் கொண்டு, அவன் மயக்கம் நீங்க, நீ தனியாக கையில் சோற்று உருண்டையுடன் முன்னர் எவ்வாறு இருந்தாயோ அப்படியே தோன்றினாய்.