Sriman Narayaneeyam - Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல் (ச்லோகம் 534)
Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல்
ப்ரத்யேகமேவ கமலா பரிலாலிதாங்காந் போகீந்த்ர போக சயநாந் நயநாபிராமாந் லீலா நிமீலித த்ருச: ஸநகாதியோகி வ்யாஸேவிதாந் கமலபூர்பவத: ததர்ச ப்ரதி ஏகம் ஏவ கமலா பரிலாலித அங்காந் போகீந்த்ர போக சயநாந் நயந அபிராமாந் லீலா நிமீலித த்ருச: ஸநக ஆதி யோகி வ்யாஸேவிதாந் கமலபூ: பவத: ததர்ச प्रत्येकमेव कमलापरिलालिताङ्गान् भोगीन्द्रभोगशयनान्नयनाभिरामान् । लीलानिमीलितदृशस्सनकादियोगि - व्यासेवितान् कमलभूर्भवतो ददर्श
குருவாயூரப்பா! உன்னுடைய ஒவ்வோர் உருவத்தையும் மஹாலக்ஷ்மி சீராட்டி வணங்கினாள். ஒவ்வோர் உருவமும், திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்தபடியே காணப்பட்டது. ஒவ்வொன்றும், யோக நித்திரையில் கண் மூடி இருந்தது. ஒவ்வொன்றையும் ஸநகாதிகள் வணங்கித் துதித்தனர். இப்படியாக நான்முகன் உனது வடிவங்களை அவர்களில் கண்டான் அல்லவா?