Sriman Narayaneeyam - Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல் (ச்லோகம் 533)

Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல்

வர்ஷாவதௌ நவ புராதந வத்ஸ பாலாந் த்ருஷ்ட்வா விவேக மஸ்ருணே த்ருஹிணே விமூடே ப்ராதீத்ருச: ப்ரதிநவாந் மகுடாங்கதாதி பூஷாம் சதுர்புஜ யுஜ: ஸஜலாம்புதாபாந் வர்ஷ அவதௌ நவ புராதந வத்ஸ பாலாந் த்ருஷ்ட்வா விவேகம் அஸ்ருணே த்ருஹிணே விமூடே ப்ராதீத்ருச: ப்ரதிநவாந் மகுட அங்கத ஆதி பூஷாம் சதுர்புஜ யுஜ: ஸஜல அம்புத ஆபாந் वर्षावधौ नवपुरातनवत्सपालान् दृष्ट्वा विवेकमसृणे द्रुहिणे विमूढे । प्रादीदृशः प्रतिनवान् मकुटान्गदादि - भूषांश्चतुर्भुजयुजस्सजलाम्बुदाभान्

குருவாயூரப்பா! வருடத்தின் முடிவில் நான்முகன் தான் ஒளித்து வைத்திருந்த கன்றுகள் மற்றும் சிறுவர்களுக்கும், புதிதாக உள்ள சிறுவர்கள் மற்றும் கன்றுகளுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் காண இயலாமல் வியப்புற்று மயங்கி நின்றான். அப்போது நீ புதிய சிறுவர்கள் மற்றும் கன்றுகளை (நான்முகன் அறிந்து கொள்வதற்காக) நான்கு கரங்களுடனும், க்ரீடம் முதலான ஆபரணங்களுடனும், மழைநீர் கொண்ட கறுத்த மேகம் போன்றும் உனது ரூபமாகத் தோன்றச் செய்தாய் அல்லவா?