Sriman Narayaneeyam - Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல் (ச்லோகம் 532)

Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல்

ஏவம் ப்ரதிக்ஷண விஜ்ரும்பித ஹர்ஷ பார நிச்சேஷ கோப கண லாலித பூரி மூர்த்திம் த்வாமக்ரஜோSபி புபுதே கில வத்ஸராந்தே ப்ரஹ்மாத்மநோரபி மஹாந் யுவயோர்விசேஷ: ஏவம் ப்ரதிக்ஷண விஜ்ரும்பித ஹர்ஷ பார நிச்சேஷ கோப கண லாலித பூரி மூர்த்திம் த்வாம் அக்ரஜ: அபு புபுதே கில வத்ஸர அந்தே ப்ரஹ்ம ஆத்மந: அபி மஹாந் யுவயோ: விசேஷ: एवं प्रतिक्षणविजृम्भितहर्षभार - निश्शेषगोपगणलालितभूरिमूर्तिम् । त्वामग्रजोऽपि बुबुधे किल वत्सरान्ते ब्रह्मात्मनोरपि महान् युवयोर्विशेषः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக அனைத்து கோபிகைகளும், பல வடிவம் கொண்ட உன்னை, ஒவ்வொரு நிமிடத்திலும் ஆனந்தம் பொங்க வைத்தனர். நீ இவ்வாறு பல உருவம் கொண்டிருந்ததை உனது அண்ணனான பலராமன் கூட வருட முடிவில்தான் அறிந்தான் அல்லவா? நீங்கள் இருவருமே ஒரே ப்ரஹ்மத்தின் ஸ்வரூபங்கள் என்றாலும் உங்களுக்கு இடையே ஒரு வேறுபாடு இருந்தது அல்லவா?