Sriman Narayaneeyam - Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல் (ச்லோகம் 531)

Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல்

ஜீவம் ஹி கஞ்சிதபிமாந வசாத் ஸ்வகீயம் மத்வா தநூஜ இதி ராகபரம் வஹந்த்ய: ஆத்மாநமேவ து பவந்தமவாப்ய ஸூநும் ப்ரீதிம் யயுர்ந கியதீம் விநிதாச்ச காவ: ஜீவம் ஹி கஞ்சித் அபிமாந வசாத் ஸ்வகீயம் மத்வா தநூஜ இதி ராகபரம் வஹந்த்ய: ஆத்மாநம் ஏவ து பவந்தம் அவாப்ய ஸூநும் ப்ரீதிம் யயு: ந கியதீம் விநிதா: ச காவ: जीवं हि किञ्चिदभिमानवशात् स्वकीयं मत्वा तनूज इति रागभरं वहन्त्यः । आत्मानमेव तु भवन्तमवाप्य सूनुं प्रीतिं ययुर्न कियतीं वनिताश्च गावः

குருவாயூரப்பா! இந்த உலகில் ஏதோ ஒரு ஜீவனைத் தனது பிள்ளை என்று பெற்றெடுத்து அதன் மீது அன்பு வைக்கின்றனர். இப்படி இருக்கும்போது, அங்கு இருந்த பசுக்களும் தாய்மார்களும், தங்கள் உயிராகவே நினைத்திருந்த உன்னைத் தங்கள் பிள்ளைகளாக (அவர்கள் அறியாமலேயே) அடைந்தபோது அவர்கள் எவ்வாறு மிகழ்வுறாமல் இருந்திருப்பார்கள்.