Sriman Narayaneeyam - Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல் (ச்லோகம் 529)
Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல்
வத்ஸாயிதஸ்ததநு கோப கணாயிதஸ்த்வம் சிக்யாதி பாண்ட முரளீ கவலாதிரூப: ப்ராக்வத் விஹ்ருத்ய விபிநேஷு சிராய ஸாயம் த்வம் மாயயாSத பஹுதா ப்ரஜமாயயாத வத்ஸாயித: ததநு கோப கணாயித: த்வம் சிக்ய ஆதி பாண்ட முரளீ கவல ஆதி ரூப: ப்ராக் வத் விஹ்ருத்ய விபிநேஷு சிராய ஸாயம் த்வம் மாயயா அத பஹுதா ப்ரஜம் ஆயயாத वत्सायितस्तदनु गोपगणायितस्त्वं शिक्यादिभाण्डमुरळीगवलादिरूपः । प्राग्वद्विहृत्य विपिनेषु चिराय सायं त्वं माययाऽथ बहुधा व्रजमाययाथ
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர், நீ உனது மாயை மூலம் ஆயர் சிறுவர்களாகவும் கன்றுகளாகவும் உருமாறினாய். இது தவிர அவர்கள் உறி முதலான பாத்திரங்களாகவும், புல்லாங்குழல்களாகவும், குச்சிகளாகவும் வடிவங்கள் எடுத்தாய். அத்துடன் காட்டில் எப்போதும் போல் விளையாடினாய். பின்னர் மாலை நேரமானதும் ப்ருந்தாவனம் திரும்பினாய் அல்லவா?