Sriman Narayaneeyam - Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல் (ச்லோகம் 528)

Dasaka 52 - நான்முகனின் கர்வம் நீக்குதல்

வத்ஸாநவீக்ஷ்ய விவசே பசுபோத்கரே தாந் ஆநேதுகாம இவ தாத்ரு மதாநுவர்த்தீ த்வம் ஸாமி புக்த கவலோ கதவாம்ஸ்ததாநீம் புக்தாம்ஸ்திரோSதித ஸரோஜபவ: குமாராந் வத்ஸாந் அநவீக்ஷ்ய விவசே பசுப உத்கரே தாந் ஆநேதுகாம இவ தாத்ரு மத அநுவர்த்தீ த்வம் ஸாமி புக்த கவல: கதவாந் ததாநீம் புக்தாந் திரோதித ஸரோஜபவ: குமாராந் वत्सानवीक्ष्य विवशे पशुपोत्करे तानानेतुकाम इव धातृमतानुवर्ती । त्वं सामिभुक्तकबलो गतवांस्तदानीं भुक्तांस्तिरोधित सरोजभवः कुमारान्

குருவாயூரப்பா! தங்கள் மாடுகளைக் காணாமல் உனது நண்பர்களான ஆயர் சிறுவர்கள் மனவருத்தம் கொண்டனர். நீயும், நான்முகனுடைய திட்டத்திற்குத் துணை போவது போன்று, பாதி உண்ட சோற்றுக் கவளத்தோடு (மாடுகளைத் தேட) சென்றாய். அப்போது நான்முகன், அங்கே உண்டு கொண்டிருந்த சிறுவர்களையும் மறைத்தான்.