Sriman Narayaneeyam - Dasaka 51 - அகாஸுர வதம் (ச்லோகம் 526)

Dasaka 51 - அகாஸுர வதம்

ஸுகாசநம் த்விஹ தவ கோபமண்டலே மகாசநாத் ப்ரியமிவ தேவமண்டலே இதி ஸ்துதஸ்திரிதசவரைர் ஜகத்பதே மருத்புரீ நிலய கதாத் ப்ரபாஹி மாம் ஸுக அசநம் து இஹ தவ கோபமண்டலே மக அசநாத் ப்ரியம் இவ தேவ மண்டலே இதி ஸ்துத: த்ரிதசவரை: ஜகத்பதே மருத் புரீ நிலய கதாத் ப்ரபாஹி மாம் सुखाशनं त्विह तव गोपमण्डले मखाशनात्प्रियमिव देवमण्डले । इति स्तुतस्त्रिदशवरैर्जगत्पते मरुत्पुरीनिलय गदात्प्रपाहि माम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உலகின் பதியே! அந்தத் தேவர்கள் உன்னை நோக்கி, “பகவானே! இங்கு கோபர்களின் இடத்தில் அவர்கள் குழந்தைகளோடு அமர்ந்து உணவை உண்கிறாய். இந்த உணவு, தேவலோகத்தில் நடைபெறும் யாகங்களில் உனக்கு அளிக்கப்படும் அவிர்பாக உணவை விடச் சிறப்பாகவும் ப்ரியமாகவும் உள்ளது போலும்”, என்று கூறியபடி வணங்கினர். இப்படிப்பட்ட செயல்களை நிகழ்த்தும் நீ என்னை பிணிகளிடம் இருந்து காக்க வேண்டும்.***