Sriman Narayaneeyam - Dasaka 51 - அகாஸுர வதம் (ச்லோகம் 525)

Dasaka 51 - அகாஸுர வதம்

விஷாணிகாமபி முரளீம் நிதம்பகே நிவேசயந் கபலதர: கராம்புஜே ப்ரஹாஸயந் கலவசநை: குமாரகாந் புபோஜித த்ரிதச கணைர்முதா நுத: விஷாணிகாம் அபி முரளீம் நிதம்பகே நிவேசயந் கபலதர: கர அம்புஜே ப்ரஹாஸயந் கலவசநை: குமாரகாந் புபோஜித த்ரிதசகணை: முதா நுத: विषाणिकामपि मुरळीं नितम्बके निवेशयन् कबलधरः कराम्बुजे । प्रहासयन् लवचनैः कुमारकान् बुभोजिथ त्रिदशगणैर्मुदा नुतः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ உனது மாடு மேய்க்கும் குச்சியையும், புல்லாங்குழலையும் இடுப்பில் செருகி வைத்திருந்தாய். தாமரை போன்று சிவந்தும் அழகாயும் உள்ள உனது சிறிய கைகளில் உணவை வைத்துக் கொண்டு நின்றாய். உனது வசீகரமான பேச்சுகள் மூலம் நண்பர்களை மகிழ வைத்தாய். அப்படியே உணவையும் உண்டாய். இதனைக் கண்டு மகிழ்வுற்ற தேவர்கள் உன்னைத் துதித்தனர் அல்லவா?