Sriman Narayaneeyam - Dasaka 51 - அகாஸுர வதம் (ச்லோகம் 522)

Dasaka 51 - அகாஸுர வதம்

கலோதரே விபுலித வர்ஷ்மணா த்வயா மஹோரகே லுடதி நிருத்த மாருதே த்ருதம் பவாந் விதலித கண்ட மண்டல: விமோசயந் பசுப பசூந் விநிர்யயௌ கல உதரே விபுலித வர்ஷ்மணா த்வயா மஹா உரகே லுடதி நிருத்த மாருதே த்ருதம் பவாந் விதலித கண்ட மண்டல: விமோசயந் பசுப பசூந் விநிர்யயௌ गलोदरे विपुलितवर्ष्मणा त्वया महोरगे लुठति निरुद्धमारुते । द्रुतं भवान् विदलितकण्ठमण्डलो विमोचयन् पशुपशून् विनिर्ययौ

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தப் பாம்பின் வாய்க்குள் நுழைந்த நீ, அதன் கழுத்தில் உனது உருவத்தைப் பெரியவனாக வளர்த்தாய். இதனால் அந்தப் பாம்பு மூச்சு விடமுடியாமல் திணறியது. அந்த வேதனையில் புரண்டது. நீ வேகமாக அதன் கழுத்தைப் பிளந்து கொண்டு, உனது தோழர்களையும், மாடுகளையும் அழைத்து கொண்டு வெளியில் வந்தாய்.