Sriman Narayaneeyam - Dasaka 51 - அகாஸுர வதம் (ச்லோகம் 519)

Dasaka 51 - அகாஸுர வதம்

ப்ரசாரயதிரவிரல சாத்வலே தலே பசூந் விபோ பவதி ஸமம் குமாரகை: அகாஸுரோ ந்யருணதகாய வர்த்தநீ பயாநக ஸபதி சயாநகாக்ருதி: ப்ரசாரயதி அவிரல சாத்வலே தலே பசூந் விபோ பவதி ஸமம் குமாரகை: அகாஸுர: ந்யருணத் அகாய வர்த்தநீ பயாநக ஸபதி சயாநக ஆக்ருதி: प्रचारयत्यविरलशाद्वले तले पशून्विभो भवति समं कुमारकैः । अघासुरो न्यरुणदघाय वर्तनीं भयानकस्सपदि शयानकाकृतिः

குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! நீ ஆயர்களோடு புற்கள் நிறைந்த தரைப்பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாய். அப்போது அகன் என்ற அசுரன் உனக்கு ஆபத்து விளைவிப்பதற்காக, பெரிய மலைப்பாம்பு போன்று உருவம் எடுத்துக் கொண்டு நீ செல்லும் வழியை மறித்துக் கிடந்தான் அல்லவா?