Sriman Narayaneeyam - Dasaka 51 - அகாஸுர வதம் (ச்லோகம் 518)
Dasaka 51 - அகாஸுர வதம்
விநிர்யதஸ்தவ சரணாம்புஜ த்வயாத் உதஞ்சிதம் த்ரிபுவந பாவநம் ரஜ: மஹர்ஷய: புலகதரை: கலேவரை: உதூஹிரே த்ருத பவதீக்ஷணோத்ஸவா: விநிர்யத: தவ சரண அம்புஜ த்வயாத் உதஞ்சிதம் த்ரிபுவந பாவநம் ரஜ: மஹர்ஷய: புலகதரை: கலேவரை: உதூஹிரே த்ருத பவத் ஈக்ஷண உத்ஸவா: विनिर्यतस्तव चरणाम्बुजद्वयादुदञ्चितं त्रिभुवनपावनं रजः । महर्षयः पुलकधरैः कलेबरैरुदूहिरे धृतभवदीक्षणोत्सवाः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ இவ்வாறு வெளியில் கிளம்பியபோது, அங்கு உனது தாமரை போன்ற அழகிய திருவடிகளில் புழுதி கிளம்பியது. அது மூன்று உலகங்களையும் தூய்மையாக்க வல்லது அல்லவா? அதனை முனிவர்கள் தங்கள் உடலில் பூசிக்கொண்டு உன்னுடைய தரிசனத்தை ஒரு விழாவாகவே கொண்டாடினர் அல்லவா?