Sriman Narayaneeyam - Dasaka 51 - அகாஸுர வதம் (ச்லோகம் 517)
Dasaka 51 - அகாஸுர வதம்
கதாசந வ்ரஜ சிசுபி: ஸமம் பவாந் வநாசநே விஹித மதி: ப்ரகேதாம் ஸமாவ்ருதோ பஹுதர வத்ஸ மண்டலை: ஸதேமநைந்நிரகமதீச ஜேமநை: கதாசந வ்ரஜ சிசுபி: ஸமம் பவாந் வந அசநே விஹித மதி: ப்ரகேதாம் ஸமாவ்ருத: பஹுதர வத்ஸ மண்டலை: ஸதேமநை: நிரகமத் ஈச ஜேமநை: कदाचन व्रजशिशुभिः समं भवान् वनाशने विहितमतिः प्रगेतराम् । समावृतो बहुतरवत्समण्डलैः सतेमनैर्निरगमदीश जेमनैः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஈசனே! ஒரு நாள் உனது நண்பர்களுடன் சென்று வனத்தில் உணவு உண்ண ஆவல் கொண்டாய். அதற்காக ஒரு நாள் அதிகாலையில் பல மாடுகளுடன் கையில் சாதம், ஊறுகாய் போன்றவற்றை எடுத்துக் கொண்டு நீ புறப்பட்டாய் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-12 முழுவதும் மற்றும் x-13-1 முதல் x-13-11 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.