Sriman Narayaneeyam - Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம் (ச்லோகம் 516)

Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம்

லலித முரளீ நாதம் தூராந் நிசம்ய வதூ ஜநை: த்வரிதமுபகம்யாராதாரூட மோதமுதீக்ஷித: ஜநித ஜநநீ நந்தாநந்த: ஸமீரண மந்திர ப்ரதித வஸதே சௌரே தூரீ குருஷ்வ மமாமயாந் லலித முரளீ நாதம் தூராந் நிசம்ய வதூ ஜநை: த்வரிதம் உபகம்ய ஆராத் ஆரூட மோதம் உதீக்ஷித: ஜநித ஜநநீ நந்த ஆநந்த: ஸமீரண மந்திர ப்ரதித வஸதே சௌரே தூரீ குருஷ்வ மம ஆமயாந் ललितमुरळीनादं दूरान्निशम्य वधूजनै - स्त्वरितमुपगम्यारादारूढमोदमुदीक्षितः । जनितजननीनन्दानन्दस्समीरणमन्दिर - प्रथितवसते शौरे दूरीकुरुष्व ममामयान्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ வெகு தூரத்தில் வரும்போதே உனது இனிமையான குழல் ஓசையைக் கேட்ட கோபியர்கள் விரைவாக உன்னிடம் வந்தனர். அனைவரும் மகிழ்ந்தனர். உனது தாய்க்கும் நந்தகோபருக்கும் நீ மிகுந்த ஆனந்தத்தை அளித்தாய். இப்படிப்பட்ட நீ, எனது பிணிகளை நீக்க வேண்டும்.***