Sriman Narayaneeyam - Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம் (ச்லோகம் 515)

Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம்

ஸபதி ஸஹஜாம் ஸந்த்ரஷ்டும் வா ம்ருதாம் கலு பூதநாம் அநுஜமகமப்யக்ரே கத்வா ப்ரதீக்ஷிதுமேவ வா சமந நிலயம் யாதே தஸ்மிந் பகே ஸுமநோகணே கிரதி ஸுமநோ வ்ருந்தம் ப்ருந்தாவநாத் க்ருஹமையதா: ஸபதி ஸஹஜாம் ஸந்த்ரஷ்டும் வா ம்ருதாம் கலு பூதநாம் அநுஜம் அகம் அபி அக்ரே கத்வா ப்ரதீக்ஷிதும் ஏவ வா சமந நிலயம் யாதே தஸ்மிந் பகே ஸுமநோகணே கிரதி ஸுமந: வ்ருந்தம் ப்ருந்தாவநாத் க்ருஹம் ஐயதா: सपदि सहजां सन्द्रष्टुं वा मृतां खलु पूतना - मनुजमघमप्यग्रे गत्वा प्रतीक्षितुमेव वा । शमननिलयं याते तस्मिन्बके सुमनोगणे किरति सुमनोबृन्दं बृन्दावनाद्गृहमैयथाः

குருவாயூரப்பா! பகாசுரன் என்ற அந்த அசுரன் உன்னால் முன்பே கொல்லப்பட்ட பூதனையின் சகோதரன் ஆவான். தன்னுடைய சகோதரியான பூதனையைக் காண்பதற்காகவோ அல்லது உன்னால் கொல்லப்படப் போகும் அகாசுரன் என்ற தனது தம்பியை வரவேற்பதற்காகவோ, இவன் இப்போது யமலோகம் சென்றான். உன் மீது தேவர்கள் மலர்கள் தூவினர். நீயும் ப்ருந்தாவனத்தில் உள்ள உனது வீட்டிற்குச் சென்றாய் அல்லவா?