Sriman Narayaneeyam - Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம் (ச்லோகம் 514)
Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம்
பிபதி ஸலிலம் கோப வ்ராதே பவந்தமபித்ருத: ஸ கில நிகிலந்நக்நி ப்ரக்யம் புநர்த்ருதமுத்வமந் தளயிதுமகாத் த்ரோட்யா: கோட்யா ததாSSசு பவாந் விபோ கல ஜந பிதா சுஞ்சுச்சஞ்சூ ப்ரக்ருஹ்ய ததார தம் பிபதி ஸலிலம் கோப வ்ராதே பவந்தம் அபித்ருத: ஸ கில நிகிலந் அக்நி ப்ரக்யம் புந: த்ருதம் உத்வமந் தளயிதும் அகாத் த்ரோட்யா: கோட்யா ததா தஆசு பவாந் விபோ கல ஜந பிதா சுஞ்சு: சஞ்சூ ப்ரக்ருஹ்ய ததார தம் पिबति सलिलं गोपव्राते भवनतमभिद्रुतः स किल निगिलन्नग्निप्रख्यं पुनर्द्रुतमुद्वमन् । दलयितुमगात्त्रोट्याः कोट्या तदा यु भवान् विभो खलजनभिदाचुञ्चुश्चञ्चू प्रगृह्य ददार तम्
குருவாயூரப்பா! எங்கும் நிறைந்தவனே! நீங்கள் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது, பகன் என்ற அந்தக் கொக்கு அசுரன் உன்னை விழுங்கினான். உடனே நீ நெருப்பு போன்று மாறினாய். இதனால் அவன் உன்னை வெளியில் உமிழ்ந்தான். மீண்டும் தனது பெரிய அலகின் மூலமாக உன்னைக் குத்திக் கிழிக்க வந்தான். ஆனால் தீயவர்களை அழிப்பதில் வல்லவனாகிய நீ, அவனது இரண்டு அலகுகளையும் பிடித்து இழுத்துக் கிழித்து அவனைக் கொன்றாய் அல்லவா?