Sriman Narayaneeyam - Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம் (ச்லோகம் 513)

Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம்

க்வசந திவஸே பூயோ பூயஸ்தரே பருஷாதபே தபந தநயா பாத: பாதும் கதா பவதாதய: சலித கருதம் ப்ரேக்ஷமாஸுர்பகம் கலு விஸ்ம்ருதம் க்ஷிதிகர கருச்சேதே கைலாஸ சைலமிவாபரம் க்வசந திவஸே பூய: பூயஸ்தரே பருஷ ஆதபே தபந தநயா பாத: பாதும் கதா பவத் ஆதய: சலித கருதம் ப்ரேக்ஷமாஸு: பகம் கலு விஸ்ம்ருதம் க்ஷிதிகர கருத் சேதே கைலாஸ சைலம் இவ அபரம் क्वचन दिवसे भूयो भूयस्तरे परुषातपे तपनतनयापाथः पातुं गता भवदादयः । चलितगरुतं प्रेक्षामासुर्बकं खलु विस्मृतं क्षितिधरगरुच्छेदे कैलासशैलमिवापरम्

குருவாயூரப்பா! ஒருநாள் கடுமையான வெப்பம் நிலவியது. அன்று நீயும் உனது நண்பர்களும் தாகம் தீர்ப்பதற்காக யமுனை நதிக்குச் சென்றீர்கள். அப்போது, முன்பு ஒரு முறை இந்திரன் வெட்ட மறந்து விடப்பட்ட கயிலாய மலை போன்று விளங்கிய (பெரிய வெண்மையான) கொக்கு ஒன்றைக் கண்டாய் அல்லவா?