Sriman Narayaneeyam - Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம் (ச்லோகம் 512)

Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம்

ஸுரபிலதமா மூர்த்தந்யூர்த்வம் குத: குஸுமாவலீ நிபததி தவேத்யுக்தோ பாலை: ஸஹேலமுதைரய: ஜடிதி தநுஜ க்ஷேபேணோர்த்வம் கதஸ்தருமண்டலாத் குஸுமநிகர: ஸோSயம் நூநம் ஸமேதி சநைரிதி ஸுரபிலதமா மூர்த்தநி ஊர்த்வம் குத: குஸுமாவலீ நிபததி தவ இதி உக்த: பாலை: ஸஹேலம் உதைரய: ஜடிதி தநுஜ க்ஷேபேண ஊர்த்வம் கத: தரு மண்டலாத் குஸும நிகர: ஸ: அயம் நூநம் ஸமேதி சநை: இதி सुरभिलतमा मूर्धन्यूर्ध्वं कुतः कुसुमावली निपतति तवेत्युक्तो बालैः सहेलमुदैरयः । झटिति दनुजक्षेपेणोर्ध्वं गतस्तरुमण्डलात् कुसुमनिकरस्सोऽयं नूनं समेति शनैरिति

குருவாயூரப்பா! அந்த மலர்களைக் கண்ட ஆயர் சிறுவர்கள், “மணம் வீசும் இந்த மலர்கள் உன் தலை மீது எங்கிருந்து வந்து விழுகின்றன?”, என்று வியப்புடன் கேட்டனர். அதற்கு நீ அவர்களிடம், “நான் அசுரனை எறிந்தபோது மரத்தில் இருந்த மலர்கள் உயரமாகப் பறந்து விட்டன. அவையே இப்போது வந்து விழுகின்றன என்று நினைக்கிறேன்”, என விளையாட்டாகக் கூறினாய் அல்லவா?