Sriman Narayaneeyam - Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம் (ச்லோகம் 511)
Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம்
நிபததி மஹா தைத்யே ஜாத்யா துராத்மநி தத்க்ஷணம் நிபதந ஜவ க்ஷுண்ண க்ஷோணீ ருஹ க்ஷத காநநே திவி பரிமிளத் வ்ருந்தா வ்ருந்தாரகா: குஸுமோத்கரை: சிரஸி பவதோ ஹர்ஷாத் வர்ஷந்தி நாம ததா ஹரே நிபததி மஹா தைத்யே ஜாத்யா துராத்மநி தத் க்ஷணம் நிபதந ஜவ க்ஷுண்ண க்ஷோணீ: உஹ க்ஷத காநநே திவி பரிமிளத் வ்ருந்தா: வ்ருந்தாரகா: குஸும உத்கரை: சிரஸி பவத: ஹர்ஷாத் வர்ஷந்தி நாம ததா ஹரே निपतति महादैत्ये जात्या दुरात्मनि तत्क्षणं निपतनजवक्षुण्णक्षोणीरुहक्षतकानने । दिवि परमिलद्वृन्दा बृन्दारकाः कुसुमोत्करैः शिरसि भवतो हर्षाद्वर्षन्ति नाम तदा हरे
ஸ்ரீஹரியே! குருவாயூரப்பா! பிறப்பிலேயே கொடியவனாகிய அந்த அசுரன் விழுந்த நேரத்தில், அங்கு இருந்த மரங்கள் அனைத்தும் நொறுங்கி விழுந்தன. இதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து, ஆகாயத்தில் இருந்து உன் திருமுடி மீது மலர்களைத் தூவினார்கள்.