Sriman Narayaneeyam - Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம் (ச்லோகம் 510)
Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம்
ரபஸ விலஸத் புச்சம் விச்சாயதோSஸ்ய விலோகயந் கிமபி வலித ஸ்கந்தம் ரந்த்ர ப்ரதீக்ஷமுதீக்ஷிதம் தமத சரணே பிப்ரத் விப்ராமயந்முஹுருச்சகை: குஹசந மஹா வ்ருக்ஷே சிக்ஷேபித க்ஷத ஜீவிதம் ரபஸ விலஸத் புச்சம் விச்சாயத: அஸ்ய விலோகயந் கிம் அயி வலித ஸ்கந்தம் ரந்த்ர ப்ரதீக்ஷம் உதீக்ஷிதம் தம் அத சரணே பிப்ரத் விப்ராமயந் முஹு: உச்சகை: குஹசந மஹா வ்ருக்ஷே சிக்ஷேபித க்ஷத ஜீவிதம் रभसविलसत्पुच्छं विच्छायतोऽस्य विलोकयन् किमपि वलितस्कन्धं रन्ध्रप्रतीक्षमुदीक्षितम् । तमथ चरणे बिभ्रद्विभ्रामयन्मुहुरुच्चकैः कुहचन महावृक्षे चिक्षेपिथ क्षतजीवितम्
குருவாயூரப்பா! அந்த அசுரன் தனது வாலை வேகமாக ஆட்டிக் கொண்டும், தனது கழுத்தைத் திருப்பி பார்த்துக் கொண்டும் (உன்னை கொல்ல சரியான நேரம் பார்த்து) இருந்தான். அவனது தீய பார்வையை நீ புரிந்து கொண்டாய். அவன் கால்களைப் பிடித்துச் சுழற்றத் தொடங்கினாய். இதனால் அவன் உயிர் பிரிந்தது. அந்த உடலை ஒரு மரத்தின் மீது எறிந்தாய் அல்லவா?