Sriman Narayaneeyam - Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம் (ச்லோகம் 509)

Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம்

விலஸதுலபே காந்தாராந்தே ஸமீரண சீதலே விபுல யமுநாதீரே கோவர்த்தநாசல மூர்த்தஸு லலித முரளீ நாத: ஸஞ்சாரயந் கலு வாத்ஸகம் க்வசந திவஸே தைத்யம் வத்ஸாக்ருதிம் த்வமுதைக்ஷதா: விலஸத் உலபே காந்தார அந்தே ஸமீரண சீதலே விபுல யமுநா தீரே கோவர்த்தந அசல மூர்த்தஸு லலித முரளீ நாத: ஸஞ்சாரயந் கலு வாத்ஸகம் க்வசந திவஸே தைத்யம் வத்ஸ ஆக்ருதிம் த்வம் உதைக்ஷதா: विलसदुलपे कान्तारान्ते समीरणशीतळे विपुलयमुनातीरे गोवर्धनाचलमूर्धसु । ललितमुरळीनादस्सञ्चारयन्खलु वात्सकं क्वचन दिवसे दैत्यं वत्साकृतिं त्वमुदैक्षथाः

குருவாயரப்பா! எங்கும் பசுமையாக இருந்த புல் தரைகளிலும், யமுனை நதியில் இருந்து வீசும் குளிர்ந்த காற்று உள்ள கரைகளிலும், கோவர்த்தன மலையின் உச்சியிலும் அமர்ந்தபடி, மிகவும் இனிமையாக உனது புல்லாங்குழலை நீ ஊதிக் கொண்டு, மாடுகளை மேய்த்து வந்தாய். அப்போது ஒருநாள் கன்று உருவில் வந்த அசுரன் ஒருவனைக் கண்டாய் அல்லவா?