Sriman Narayaneeyam - Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம் (ச்லோகம் 508)
Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம்
விஹித ஜகதீ ரக்ஷம் லக்ஷ்மீ கராம்புஜ லாலிதம் தததி சரண த்வந்த்வம் ப்ருந்தாவநே த்வயி பாவநே கிமிவ ந பபௌ ஸம்பத் ஸம்பூரிதம் தரு வல்லரீ ஸலில தரணீ கோத்ர க்ஷேத்ராதிகம் கமலாபதே விஹித ஜகதீ ரக்ஷம் லக்ஷ்மீ கர அம்புஜ லாலிதம் தததி சரண த்வந்த்வம் ப்ருந்தாவநே த்வயி பாவநே கிம் இவ ந பபௌ ஸம்பத் ஸம்பூரிதம் தரு வல்லரீ ஸலில தரணீ கோத்ர க்ஷேத்ர ஆதிகம் கமலா பதே विहितजगतीरक्षं लक्ष्मीकराम्बुजलालितं ददति चरणद्वन्द्वं बृन्दावने त्वयि पावने । किमिव न बभौ सम्पत्सम्पूरितं तरुवल्लरी - सलिलधरणीगोत्रक्षेत्रादिकं कमलापते
க்ருஷ்ணா! குருவாயூரப்பா மஹாலக்ஷ்மியின் நாயகனே! உனது பாதங்கள் அனைத்து உலகையும் காத்து நிற்பவை; மஹாலக்ஷ்மியால், அவளது தாமரை போன்ற சிவந்த அழகிய திருக்கரங்களால் எப்போதும் வருடப்படுபவை ஆகும். இத்தகைய சிறப்பான உனது திருவடிகள், ப்ருந்தாவனத்தில் உள்ள மரம், செடி, குளங்கள், மண், மலை ஆகியவற்றின் மீது பட்டன. இதனால் அவை எதுதான் செழிப்பு அடையவில்லை?