Sriman Narayaneeyam - Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம் (ச்லோகம் 507)
Dasaka 50 - வத்ஸ அசுரன், பகாசுரன் வதம்
தரல மதுக்ருத் வ்ருந்தே ப்ருந்தாவநேSத மநோஹரே பசுப சிசுபி: ஸாகம் வத்ஸாநுபாலந லோலுப: ஹலதரஸகோ தேவ ஸ்ரீமந் விசேரித தாரயந் கவல முரளீவேத்ரம் நேத்ராபிராம தநு த்யுதி: தரல மதுக்ருத் வ்ருந்தே ப்ருந்தாவநே அத மநோஹரே பசுப சிசுபி: ஸாகம் வத்ஸ அநுபாலந லோலுப: ஹலதர ஸக: தேவ ஸ்ரீமந் விசேரித தாரயந் கவல முரளீ வேத்ரம் நேத்ர அபிராம தநு த்யுதி: तरलमधुकृद्वृन्दे बृन्दावनेऽथ मनोहरे पशुपशिशुभिस्साकं वत्सानुपालनलोलुपः । हलधरसखो देव श्रीमन् विचेरिथ धारयन् गवलमुरळीवेत्रं नेत्राभिरामतनुद्युतिः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மஹாலக்ஷ்மியின் நாதனே! தேவனே! காண்பவர்கள் கண்களுக்கு இதமாக உள்ளது போன்ற ஒளி பொருந்திய மேனியைக் நீ கொண்டிருந்தாய். கைகளில் கலப்பை வைத்திருந்த பலராமனுடனும் மற்ற இடையர்களுடனும் இணைந்து, நீ கன்றுக்குட்டிகளை மேய்க்க விருப்பம் கொண்டாய். இதனால், தேன் மணத்தை விரும்பியபடி எங்கும் பரந்து திரிந்த வண்டுக் கூட்டங்கள் நிறைந்த ப்ருந்தாவனத்தில் கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், குச்சி ஆகியவற்றைக் கைகளில் கொண்டு சுற்றினாய் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-11-37 முதல் x-11-59 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.