Sriman Narayaneeyam - Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 506)

Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல்

ததாவிதேSஸ்மின் விபிநே பசவ்யே ஸமுத்ஸுகோ வத்ஸகண ப்ரசாரே சரந் ஸராமோSத குமாரகைஸ்த்வம் ஸமீர கேஹாதிப பாஹி ரோகாத் ததா விதே அஸ்மின் விபிநே பசவ்யே ஸமுத்ஸுக: வத்ஸகண ப்ரசாரே சரந் ஸராம: அத குமாரகை: த்வம் ஸமீர கேஹ அதிப பாஹி ரோகாத் तथाविधेऽस्मिन् विपिने पशव्ये समुत्सुको वत्सगणप्रचारे । चरन् सरामोऽथ कुमारकैस्त्वं समीरगेहाधिप पाहि रोगात्

குருவாயூரப்பா! க்ருஷ்ணா! இப்படியாக பல சிறப்புகள் உடையதும், பசுக்களுக்கு இன்பம் அளிப்பதுமாக ப்ருந்தாவனம் இருந்தது. அங்கு நீ பசுக்களை மேய்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டாய். பலராமனுடனும் இடையர்களுடனும் சேர்ந்து நீ பல இடங்களில் பசு மேய்த்து வந்தாய். இப்படிப்பட்ட நீ, என்னைப் பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.***