Sriman Narayaneeyam - Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 505)
Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல்
ஸமம் ததோ கோப குமாரகைஸ்த்வாம் ஸமந்த்தோ யத்ர வநாந்தமாகா: ததஸ்ததஸ்தாம் குடிலாமபச்ய: களிந்தஜாம் ராகவதீமிவைகாம் ஸமம் தத: கோப குமாரகை: த்வாம் ஸமந்த்த: யத்ர வநாந்தம் ஆகா: தத: தத: தாம் குடிலாம் அபச்ய: களிந்தஜாம் ராகவதீம் இவ ஏகாம் समं ततो गोपकुमारकैस्त्वं समन्ततो यत्र वनान्तमागाः । ततस्ततस्तां कृटिलामपश्यः कळिन्दजां रागवतीमिवैकाम्
குருவாயூரப்பா! நீ இடையர்களுடன் அந்தக் காட்டில் உள்ள பல இடங்களுக்கும் சென்றாய். நீ எந்த இடத்திற்கெல்லாம் சென்றாயோ அந்த இடங்கள் அனைத்திற்கும், உன் மீது மிகுந்த காதல் உடையவளாக ஓடி வந்த யமுனையைக் கண்டாய் அல்லவா?