Sriman Narayaneeyam - Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 504)

Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல்

மயூர கேகா சத லோபநீயம் மயூக மாலா சபலம் மணீநாம் விரிஞ்ச லோக ஸ்ப்ருசமுச்ச ச்ருங்கை: கிரிம் ச கோவர்த்தநமைக்ஷதாஸ்த்வம் மயூர கேகா சத லோபநீயம் மயூக மாலா சபலம் மணீநாம் விரிஞ்ச லோக ஸ்ப்ருசம் உச்ச ச்ருங்கை: கிரிம் ச கோவர்த்தநம் ஜக்ஷதா: த்வம் मयूरकेकाशतलोभनीयं म्यूखमीलशबळं मणीनाम् । विरिञ्चलोकस्पृशमुच्चशृङ्गैर्गिरिं च गोवर्धनमैक्षथास्त्वम्

குருவாயூரப்பா! மயில்களின் “கோ கோ” என்னும் ஓசையால் அனைவரையும் ஈர்ப்பதும், ரத்தினக்கற்கள் வீசுகின்ற ஒளியால் பல நிறங்கள் உடையதும், உயர்ந்து உள்ளதால் அதன் உச்சி ப்ரஹ்மலோகத்தை எட்டுவதும் ஆகிய கோவர்த்தன மலையை நீ பார்த்தாய் அல்லவா?