Sriman Narayaneeyam - Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 503)
Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல்
அரால மாரகாகத நிர்மலாபாம் மரால கூஜாக்ருத நர்ம லாபாம் நிரந்தர ஸ்மேர ஸரோஜ வக்த்ராம் களிந்த கந்யாம் ஸமலோகயஸ்த்வம் அரால மார்க ஆகத நிர்மல ஆபாம் மரால கூஜ ஆக்ருத நர்ம லாபாம் நிரந்தர ஸ்மேர ஸரோஜ வக்த்ராம் களிந்த கந்யாம் ஸமலோகய: த்வம் अराळमार्गागतनिर्मलापां मराळकुजाकृतनर्मलापाम् । निरन्तरस्मेरसरोजवक्त्रां कळिन्दकन्यां समलोकयस्त्वम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அன்னப்பறவைகளின் இனிமையான ஒலியே அவளது இனிமையான பேச்சு; மலர்ந்து உள்ள தாமரை மலர்களே அவளது புன்னகை உடைய முகம் - இப்படியாக வளைந்து வளைந்து ஓடுபவளும், தெளிவான நீரை உடையவளும், களிந்தன் என்பவனின் மகளுமான யமுனை நதியைக் கண்டு, நீ மகிழ்ந்தாய் அல்லவா?