Sriman Narayaneeyam - Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 501)
Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல்
நிரீக்ஷ்ய ப்ருந்தாவநமீச நந்தத் ப்ரஸூந குந்த ப்ரமுக த்ருமௌகம் அமோததா: சாத்வல ஸாந்த்ர லக்ஷ்ம்யா ஹரிந்மணீ குட்டிம புஷ்ட சோபம் நிரீக்ஷ்ய ப்ருந்தாவநம் ஈச நந்தத் ப்ரஸூந குந்த ப்ரமுக த்ரும ஔகம் அமோததா: சாத்வல ஸாந்த்ர லக்ஷ்ம்யா ஹரிந் மணீ குட்டிம புஷ்ட சோபம் निरीक्ष्य बृ(वृ)न्दावनमीश नन्दत्प्रसूनकुन्दप्रमुखद्रुमौघम् । अमोदथाश्शाद्वलसान्द्रलक्ष्म्या हरिन्मणीकुट्टिमपुष्टशोभम्
குருவாயூரப்பா! ஈசனே! (அந்த ப்ருந்தாவனம் எப்படி இருந்தது என்றால்) எங்கும் பூத்துக் குலுங்கியபடி மலர்கள்; குந்தம் போன்ற மலர்கள் நிறைந்த சோலைகள்; சோலைகளில் இரத்தினக் கற்கள் பதித்து வைத்தது போல் ஒளி வீசியபடி பசும்புற்கள் நிறைந்த தரை; இப்படியாக அழகு பொதிந்து விளங்கிய ப்ருந்தாவனத்தைக் கண்டு நீ மகிழ்ந்தாய் அல்லவா?