Sriman Narayaneeyam - Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 500)

Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல்

அநோமநோஜ்ஞ த்வநி தேநு பாலீ குர ப்ரணாதாந்தரதோ வதூபி: பவத் விநோதாலபிதாக்ஷராணி ப்ரபீய ந அஜ்ஞாயத மார்க தைர்க்யம் அந: மநோஜ்ஞ த்வநி தேநு பாலீ குர ப்ரணாத அந்தரத: வதூபி: பவத் விநோத ஆலபித அக்ஷராணி ப்ரபீய ந அஜ்ஞாயத மார்க தைர்க்யம் अनोमनोज्ञध्वनिधेनुपाळीखुरप्रणादान्तरतो वधूभिः । भवद्विनोदालपितीक्षराणि प्रपीय नाज्ञायत मार्गदैर्घ्यम्

குருவாயூரப்பா! வழி முழுவதும் வண்டிகளின் இனிமையான ஓசையும், மாடுகளின் குளம்புச் சத்தங்களும் கேட்டபடி அவர்கள் சென்றனர். மேலும், மழலை முற்றாத சொற்களால் நீ ஆயர்களுடன் இனிமையாகப் பேசுவதையும் கேட்டனர். இதனால் அவர்களுக்கு நடந்த களைப்பும் தூரமும் தெரியவில்லை.