Sriman Narayaneeyam - Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 499)
Dasaka 49 - ப்ருந்தாவனம் செல்லுதல்
ப்ருஹத் வநம் தத் கலு நந்த முக்யா விதாய கௌஷ்ட்டீநமத க்ஷணேந த்வதந்வித த்வஜ்ஜநநீ நிவிஷ்ட கரிஷ்ட யாநநாநுகதா விசேலு: ப்ருஹத் வநம் தத் கலு நந்த முக்யா விதாய கௌஷ்ட்டீநம் அத க்ஷணேந த்வத் அந்வித த்வத் ஜநநீ நிவிஷ்ட கரிஷ்ட யாந அநுகதா விசேலு: बृहद्वनं तत्खलु नन्दमुख्या विधाय गौष्ठीनमथ क्षणेन । त्वदन्वितत्वज्जननीनिविष्टगरिष्ठयानानुगता विचेलुः
குருவாயூரப்பா! அதன் பின்னர் நந்தகோபர் முதலானோர் இணைந்து, ப்ருஹத்வனம் என்ற பெயர் கொண்ட, அவர்கள் வசித்து வந்த கோகுலத்தை, சில மணி நேரத்திலேயே ஒரு மாட்டுத் தொழுவமாக மாற்றினார்கள். உன்னைத் தூக்கிக் கொண்டு உனது தாய் ஒரு வண்டியில் அமர்ந்தாள். இதனால் பெருமை உடைய அந்த வண்டியை பின்பற்றி அனைவரும் ப்ருந்தாவனத்திற்குச் சென்றனர்.