Sriman Narayaneeyam - Dasaka 48 - மரங்கள் சரிந்தன (ச்லோகம் 496)

Dasaka 48 - மரங்கள் சரிந்தன

மஹீருஹோர்மத்ய கதோ கதார்பகோ ஹரே: ப்ரபாவாதபரிக்ஷதோSதுநா இதி ப்ருவாணைர் கமிதோ க்ருஹம் பவாந் மருத் புராதீச்வர பாஹி மாம் கதாத் மஹீருஹோ: மத்ய கத: கத அர்பக: ஹரே: ப்ரபாவாத் அபரிக்ஷத: அதுநா இதி ப்ருவாணை: கமித: க்ருஹம் பவாந் மருத் புராதீச்வர பாஹி மாம் கதாத் महीरुहोर्मध्यगतो बतार्भको हरेः प्रभावादपरिक्षतोऽधुना । इति ब्रवाणैर्गमितो गृहं भवान् मरुत्पुराधीश्वर ! पाहि मां गदात्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நந்தகோபர் அனைவரிடமும், “இந்த இரண்டு பெரிய மரங்களின் இடையே புகுந்து சென்ற இந்தக் குழந்தை, ஸ்ரீஹரியின் அருளால் எந்தவிதமான ஆபத்தும் இன்றி உள்ளது. இது எத்தகைய வியப்பு!”, என்று கூறினார். அதன் பின்னர் உன்னைத் தனது வீட்டிற்குத் தூக்கிச் சென்றார். இப்படியாக பல அதிசயங்கள் புரிந்த நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்.***