Sriman Narayaneeyam - Dasaka 48 - மரங்கள் சரிந்தன (ச்லோகம் 495)
Dasaka 48 - மரங்கள் சரிந்தன
ததஸ்தரூத்தாரண தாருணாரவ ப்ரகம்பி ஸம்பாதிநி கோப மண்டலே விலஜ்ஜித த்வத் ஜநநீ முகேக்ஷணா வ்யமோக்ஷி நந்தேந பவாந் விமோக்ஷத: தத: தரு உத்தாரண தாருண ஆரவ ப்ரகம்பி ஸம்பாதிநி கோப மண்டலே விலஜ்ஜித த்வத் ஜநநீ முக ஈக்ஷணா வ்யமோக்ஷி நந்தேந பவாந் விமோக்ஷத: ततस्तरूद्दारणदारुणारवप्रकम्पिसम्पातिनि गोपमण्डले । विलज्जितत्वज्जननीमुखेक्षिणा व्यमोक्षि नन्दने भवान् विमोक्षदः
குருவாயூரப்பா! அதன் பிறகு மரங்கள் விழுந்த ஒலி கேட்ட ஆயர்கள் அங்கு விரைந்து வந்தனர். மிகுந்த அச்சத்தால் அவர்கள் நடுங்கினர். (உரலில் உன்னைக் கட்டியதால்) மிகுந்த வெட்கம் கொண்டிருந்த உனது தாயை நந்தகோபர் கண்டார். அனைவருக்கும் மோக்ஷம் என்னும் விடுதலை அளிக்கும் உன்னை, நந்தகோபர் உரலில் இருந்து விடுவித்தார் அல்லவா?