Sriman Narayaneeyam - Dasaka 48 - மரங்கள் சரிந்தன (ச்லோகம் 494)

Dasaka 48 - மரங்கள் சரிந்தன

இஹாந்ய பக்தோSபி ஸமேஷ்யதி க்ரமாத் பவந்தமேதௌ கலு ருத்ர ஸேவகௌ முநி ப்ரஸாதாத் பவதங்க்ரிமாகதௌ கதௌ வ்ருணாநௌ கலு பக்திமுத்தமாம் இஹ அந்ய பக்த: அபி ஸமேஷ்யதி க்ரமாத் பவந்தம் ஏதௌ கலு ருத்ர ஸேவகௌ முநி ப்ரஸாதாத் பவத் அங்க்ரிம் ஆகதௌ கதௌ வ்ருணாநௌ கலு பக்திம் உத்தமாம் इहान्यभक्तोऽपि समेष्यति क्रमाद् भवन्तमेतौ खलु रुद्रसेवकौ । मुनिप्रसादाद्भवदङ्घ्रिमागतौ गतौ वृणानौ खलु भक्तिमुत्तमाम्

குருவாயூரப்பா! இந்தப் பூமியில் எந்தவிதமான தேவதைகளை வணங்கும் பக்தர்களும், படிப்படியாக உன்னை வந்து அடைவார்கள் அல்லவா? இப்படியாகச் சிவனையே உபாஸித்து வந்த இவர்கள், நாரதரின் ஆசீர்வாதத்தால் உன்னையே சரணம் என்று அடைந்தனர். இதன் மூலம் உன்னிடம் உள்ள பக்தி நீங்காமல் இருக்கவேண்டும் என்பதை வரமாகப் பெற்றனர் அல்லவா?