Sriman Narayaneeyam - Dasaka 48 - மரங்கள் சரிந்தன (ச்லோகம் 491)
Dasaka 48 - மரங்கள் சரிந்தன
யுவாமவாப்தௌ ககுபாத்மதாம் சிரம் ஹரிம் நிரீக்ஷ்யாத பதம் ஸ்வமாப்நுதம் இதீரிதௌ தௌ பவதீக்ஷண ஸ்ப்ருஹாம் கதௌ வ்ரஜாந்தே ககுபௌ பபூவது: யுவாம் அவாப்தௌ ககுப ஆத்மதாம் சிரம் ஹரிம் நிரீக்ஷ்ய அத பதம் ஸ்வம் ஆப்நுதம் இதி ஈரிதௌ தௌ பவத் ஈக்ஷண ஸ்ப்ருஹாம் கதௌ வ்ரஜ அந்தே ககுபௌ பபூவது: युवामवाप्तौ ककुभात्मतां चिरं हरिं निरीक्ष्याथ पदं स्वमाप्नुतम् । इतीरितौ तौ भवदीक्षणस्पृहां गतौ व्रजान्ते ककुभौ बभूवतुः
குருவாயூரப்பா! நாரதர் அவர்களை நோக்கி, “நீங்கள் இருவரும் நெடுங்காலம் மரங்களாகவே நின்று இருப்பீர்களாக. அதன் பின்னர் ஸ்ரீஹரியின் தரிசனம் கிடைத்த பின்னர், உங்கள் இடத்தை அடைவீர்கள்”, என்று சபித்தார். உடனே அவர்கள் இருவரும் உன்னைத் தரிசிக்கும் ஆர்வம் கொண்டு கோகுலத்திற்கு வந்து மரங்களாக நின்றனர்.