Sriman Narayaneeyam - Dasaka 48 - மரங்கள் சரிந்தன (ச்லோகம் 490)
Dasaka 48 - மரங்கள் சரிந்தன
பியா ப்ரியாலோகமுபாத்த வாஸஸம் புரோ நிரீக்ஷ்யாபி மதாந்த சேதஸௌ இமௌ பவத் பக்த்யுபசாந்தி ஸித்தயே முநிர்ஜகௌ சாந்திம்ருதே குத: ஸுகம் பியா ப்ரியா லோகம் உபாத்த வாஸஸம் புர: நிரீக்ஷ்ய அபி மத அந்த சேதஸௌ இமௌ பவத் பக்தி உபசாந்தி ஸித்தயே முநி: ஜகௌ சாந்திம் ருதே குத: ஸுகம் भिया प्रियालोकमुपात्तवाससं पुरो निरीक्ष्यापि मदान्धचेतसौ । इमौ भवद्भक्त्युपशान्तिसिद्धये मुनिर्जगौ शान्तिमृते कुतस्सुखम्
குருவாயூரப்பா! நாரதரைக் கண்ட அவர்கள் இருவரின் மனைவிகளும் பயந்து, தங்கள் ஆடைகளை உடுத்திக் கொண்டனர். இதனைக் கண்டும் அவர்கள் இருவரும் எந்த மாற்றமும் இன்றி இருந்தனர். இதனைக் கண்ட நாரதர், அவர்களுக்கு உன்னிடம் பக்தியும் சாந்தியும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர்களைச் சபித்தார். மன அமைதி இன்றி எவ்வாறு இன்பம் கிடைக்கும்?