Sriman Narayaneeyam - Dasaka 48 - மரங்கள் சரிந்தன (ச்லோகம் 489)

Dasaka 48 - மரங்கள் சரிந்தன

ஸுராபகாயாம் கில தௌ மதோத்கடௌ ஸுராப காயத் பஹு யௌவதாவ்ருதௌ விவாஸிஸௌ கேளி பரௌ ஸ நாரதோ பவத் பதைக ப்ரவணோ நிரைக்ஷத ஸுர ஆபகாயாம் கில தௌ மத உத்கடௌ ஸுரா ஆப காயத் பஹு யௌவத ஆவ்ருதௌ விவாஸிஸௌ கேளி பரௌ ஸ நாரத: பவத் பத ஏக ப்ரவண: நிரைக்ஷத सुरापगायां किल तौ मदोत्कटौ सुरापगायद्बहुयौवतावृतौ । विवाससौ केळिपरौ स नारदो भवत्पदैकप्रवणो निरैक्षत

குருவாயூரப்பா! அவர்கள் இருவரும் மயக்க வெறி அடைந்தவர்களாகவும், மதுவைக் குடித்து ஆடுபவர்களாகவும், பல பெண்கள் சூழ்ந்து நிற்பவர்களாகவும் இருந்தனர். ஒருநாள் அவர்கள் இடுப்பில் துணியே இல்லாமல் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தனர். இதனை, உன்னையே எப்போதும் த்யானித்து வரும் நாரதர் கண்டார்.