Sriman Narayaneeyam - Dasaka 48 - மரங்கள் சரிந்தன (ச்லோகம் 488)

Dasaka 48 - மரங்கள் சரிந்தன

குபேர ஸூநுர்நளகூபுராபீத: பரோ மணிக்ரீவ: இதி ப்ரதாம் கத: மஹேச ஸேவாதிகதாச்ரியோந்மதௌ சிரம் கில த்வத் விமுகாவகேலதாம் குபேர ஸூநு: நளகூபுர அபீத: பர: மணிக்ரீவ இதி ப்ரதாம் கத: மஹேச ஸேவா அதிகத ச்ரிய உந்மதௌ சிரம் கில த்வத் விமுகௌ அவகேலதாம் कुबेरसूनुर्नळकूबराभिधः परो मणिग्रीव इति प्रथां गतः । महेशसेवाधिगतश्रियोन्मदौ चिरं किल त्वद्विमुखावखेलताम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! குபேரனின் மகன்களான நளகூபரன் என்பவனும் மணிக்ரீவன் என்பவனும் சிவனை ஆராதித்து மிகுந்த செல்வங்கள் அடைந்தனர். இதனால் கர்வம் கொண்டனர். உன்னிடம் எந்தவிதமான பக்தியும் செலுத்தாமல் அவர்கள் பொழுதைக் கழித்தனர். அல்லவா?