Sriman Narayaneeyam - Dasaka 48 - மரங்கள் சரிந்தன (ச்லோகம் 487)
Dasaka 48 - மரங்கள் சரிந்தன
முதா ஸுரௌகைஸ்த்வமுதார ஸம்மதை: உதீர்ய தாமோதர இத்யபிஷ்டுத: ம்ருதுதர: ஸ்வரைமுலூகலே லகந் அதூரதோ த்வௌ ககுபாவுதைக்ஷதா: முதா ஸுர ஓகை: த்வம் உதார ஸம்மதை: உதீர்ய தாமோதர இதி அபிஷ்டுத: ம்ருது உதர: ஸ்வரைம் உலூகலே லகந் அதூரத: த்வௌ ககுபௌ உதைக்ஷதா: मुदा सुरौधैस्त्वमुदारसम्मदैरुदीर्य दामोदर इत्यभिष्टुतः । मृदूदरः स्वैरमुलूखले लगन्नदूरतो द्वौ ककुभावुदैक्षथाः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னைக் கண்ட தேவர்கள் மிகுந்த ஆனந்தத்தால் உன்னை “தாமோதரன்” என்று அழைத்தனர் (தாமோதரன் = வயிற்றில் கட்டப்பட்டவன்). மிகவும் மென்மையான வயிற்றை உடைய நீ, அந்த உரலின் மீது அமர்ந்து கொண்டு, அங்கு இருந்த இரண்டு மருத மரங்களைப் பார்த்தாய் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-9-22 முதல் x-9-23, அத்யாயம் 10 மற்றும் x-11-1 முதல் x-11-6 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.