Sriman Narayaneeyam - Dasaka 47 - உரலில் கட்டுதல் (ச்லோகம் 486)

Dasaka 47 - உரலில் கட்டுதல்

யத்யபாச ஸுகமோ விபோ பவாந் ஸம்யத: கிமு ஸபாசயாSநயா ஏவமாதி திவிஜைரபிஷ்டுதோ வாத நாத பரிபாஹி மாம் கதாத் யதி அபாச ஸுகம: விபோ பவாந் ஸம்யத: கிமு ஸபாசயா அநயா ஏவம் ஆதி திவிஜை: அபிஷ்டுத: வாத நாத பரிபாஹி மாம் கதாத் यद्यपाशसुगमो भवान्व विभो संयतः किमु सपाशयानया । एवमादि दिविजैरभिष्टुतो वातनाथ परिपाहि मां गदात्

குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! “பாசம் என்பதை அறுத்தவர்களால் மட்டுமே உன்னைக் கட்டுப்படுத்த முடியும். இப்படி இருக்க, பாசம் நிறைந்த யசோதைக்கு நீ எவ்வாறு கட்டுப்பட்டாய்?”, என்று இப்படியாகத் தேவர்கள் உன்னைப் போற்றினர். இப்படிப்பட்ட நீ என்னைக் காக்க வேண்டும்.***