Sriman Narayaneeyam - Dasaka 47 - உரலில் கட்டுதல் (ச்லோகம் 485)
Dasaka 47 - உரலில் கட்டுதல்
ஸ்தீயதாம் சிரமுலூகலே கல இதி ஆகதா பவநமேவ ஸா யதா ப்ராகுலூகலபிலாந்தரே ததா ஸர்பி: அர்பிதமதந்நவஸ்திதா: ஸ்தீயதாம் சிரம் உலூகலே கல இதி ஆகதா பவநம் ஏவ ஸா யதா ப்ராக் உலூகல பில அந்தரே ததா ஸர்பி: அர்பிதம் அதந் அவஸ்திதா: स्थीयतां चिरमुलूखले खलेत्यागता भवनमेव सा यदा । प्रागुलूखलबिलान्तरे तदा सर्पिरर्पितमदन्नवास्थिताः
குருவாயூரப்பனே! இப்படியாக உன்னை உரலில் கட்டிய யசோதை, “சேட்டைப் பையனே! இப்படியே உரலுடன் நீ இரு”, என்று கூறி விட்டுச் சென்றாள். ஆனால் நீயோ அந்த உரலின் குழியில் முன்பே வைக்கப்பட்ட வெண்ணெயை எடுத்து உண்டாய் அல்லவா?