Sriman Narayaneeyam - Dasaka 47 - உரலில் கட்டுதல் (ச்லோகம் 484)

Dasaka 47 - உரலில் கட்டுதல்

விஸ்மதோத்ஸ்மித ஸகீ ஜநேக்ஷிதாம் ஸ்விந்ந ஸந்ந வபுஷம் நிரீக்ஷ்ய தாம் நித்ய முக்த வபுரப்யஹோ ஹரே பந்தம் ஏவ க்ருபயாSந்வமந்யதா: விஸ்மித உத்ஸ்மித ஸகீ ஜந ஈக்ஷிதாம் ஸ்விந்ந ஸந்ந வபுஷம் நிரீக்ஷ்ய தாம் நித்ய முக்த வபு: அபி அஹோ ஹரே பந்தம் ஏவ க்ருபயா அந்வமந்யதா:

ஸ்ரீஹரியே! குருவாயூரப்பா! யசோதையின் முயற்சிகளைக் கண்டு, அவளுடைய தோழிகள் சிரித்தனர். இதனால் மேலும் வியர்த்து சோர்ந்து போனாள். என்றும் யாராலும் கட்டுப்படுத்த முடியாதவன் நீ! ஆயினும் உனது தாயின் நிலை கண்டு கருணை கொண்ட நீ, அவள் கட்டுவதற்கு இணங்கினாய்! என்ன வியப்பு!