Sriman Narayaneeyam - Dasaka 47 - உரலில் கட்டுதல் (ச்லோகம் 483)
Dasaka 47 - உரலில் கட்டுதல்
பந்துமிச்சதி யமேவ ஸஜ்ஜநஸ்தம் பவந்தமயி பந்துமிச்சதீ ஸா நியுஜ்ய ரசநா குணாந் பஹூந் த்வி அங்குலோநமகிலம் கிலைக்ஷத பந்தும் இச்சதி யம் ஏவ ஸஜ்ஜந: தம் பவந்தம் அயி பந்தும் இச்சதீ ஸா நியுஜ்ய ரசநா குணாந் பஹூந் த்வி அங்குல ஊநம் அகிலம் கில ஐக்ஷத बन्धुमिच्छति यमेव सज्जनस्तं भवन्तमयि बन्धुमिच्छति । सा नियुज्य रशनागुणान् बहून् द्वयङ्गुलोनमखिलं किलैक्षत
குருவாயூரப்பா! உன்னை உனது அடியார்கள் தங்கள் உறவினனாகக் கொள்ள நினைக்கின்றனர். அப்படிப்பட்ட உன்னைக் கட்டிப் போட எண்ணிய யசோதை, கயிறுகளை எடுத்தாள். எத்தனைக் கயிறுகளை ஒன்றாகச் சேர்த்தாலும் (உன்னைக் கட்ட முடியாதபடி), அவை இரண்டும் அங்குலங்கள் குறைவாகவே இருந்தன.