Sriman Narayaneeyam - Dasaka 47 - உரலில் கட்டுதல் (ச்லோகம் 482)

Dasaka 47 - உரலில் கட்டுதல்

த்வாம் ப்ரக்ருஹ்ய பத பீதி பாவநா பாஸுராநந ஸரோஜமாசு ஸா ரோஷ ரோஷித முகீ ஸகீ புரோ பந்தநாய ரசநாமுபாததே த்வாம் ப்ரக்ருஹ்ய பத பீதி பாவநா பாஸுர ஆநந ஸரோஜம் ஆசு ஸா ரோஷ ரோஷித முகீ ஸகீ புரோ பந்தநாய ரசநாம் உபாததே त्वां प्रगृह्य बत भीतिभावनाभासुराननसरोजमाशु सा । रोषरूषितमुखी सखीपुरो बन्धनाय रशनामुपाददे

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அவளைக் கண்டவுடன் நீ பயந்தவனாக முகத்தை வைத்துக் கொண்டாய். அப்போது தாமரை போன்ற உனது முகம் மேலும் அழகானது. உன்னை யசோதை விரைவாக வந்து பிடித்தாள். கோபத்தால் அவள் முகம் சிவந்தது. அவளுடைய தோழிகளுக்கு முன்னால், உன்னை உரலில் கட்டி வைக்க எண்ணி கயிற்றை எடுத்தாளாமே! என்ன விபரீதம்!