Sriman Narayaneeyam - Dasaka 47 - உரலில் கட்டுதல் (ச்லோகம் 478)

Dasaka 47 - உரலில் கட்டுதல்

அர்த்த பீத குச குட்மலே த்வயி ஸ்நிக்த ஹாஸ மதுராநநாம்புஜே துக்தமீச தஹநே பரிஸ்ருதம் தர்த்தும் ஆசு ஜநநீ ஜகாம தே அர்த்த பீத குச குட்மலே த்வயி ஸ்நிக்த ஹாஸ மதுர ஆநந அம்புஜே துக்தம் ஈச தஹநே பரிஸ்ருதம் தர்த்தும் ஆசு ஜநநீ ஜகாம தே अर्धपीतकुचकुड्मळे त्वयि स्निग्धहासमधुराननाम्बुजे । दुग्धमीश दहने परिस्नुतं धर्तुमाशु जननी जगाम ते

குருவாயூரப்பா! ஈசனே! தாமரை மொட்டுகள் போன்று அழகான அவள் ஸ்தனங்களில் பாலைப் பருகினாய். அந்த மகிழ்வால் உனது முகம் தாமரை போன்று மலர்ந்து காணப்பட்டது. அந்த நேரம் அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கி வழியத் தொடங்கவே, உனது தாய் விரைவாக (உனக்குப் பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு) உன்னைக் கீழே உட்கார வைத்து விட்டு அடுப்படிக்குச் சென்றாள்.