Sriman Narayaneeyam - Dasaka 47 - உரலில் கட்டுதல் (ச்லோகம் 477)
Dasaka 47 - உரலில் கட்டுதல்
ஏகதா ததி விமாத காரிணீம் மாதரம் ஸமுபஸேதிவாந் பவாந் ஸ்தந்ய லோலுப தயா நிவாரயந்நங்கமேத்ய பபிவாந் பயோதரௌ ஏகதா ததி விமாத காரிணீம் மாதரம் ஸமுபஸேதிவாந் பவாந் ஸ்தந்ய லோலுப தயா நிவாரயந் அங்கம் ஏத்ய பபிவாந் பயோதரௌ एकदा दधिविमाथकारिणीं मातरं समुपसेदिवान् भवान् । स्तन्यलोलुपतया निवारयन्नङ्कमेत्य पपिवान् पयोधरौ
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு நாள் உனது தாய் யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அப்போது உனக்குப் பசித்த காரணத்தால் பால் குடிக்கவேண்டும் என்று எண்ணினாய். அவளிடம் சென்று தயிர் கடைவதை நிறுத்தி, அவள் மடியில் அமர்ந்து அவள் ஸ்தனங்களில் பால் அருந்தினாய் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-9ன் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.