Sriman Narayaneeyam - Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம் (ச்லோகம் 476)
Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம்
த்ருத தத்வ தியம் ததா க்ஷணம் ஜநநீம் தாம் ப்ரணயேந மோஹயந் ஸ்தநமம்ப திசேத்யுபாஸஜந் பகவந் அத்புத பால பாஹி மாம் த்ருத தத்வ தியம் ததா க்ஷணம் ஜநநீம் தாம் ப்ரணயேந மோஹயந் ஸ்தநம் அம்ப திச இதி உபாஸஜந் பகவந் அத்புத பால பாஹி மாம் धृततत्त्वधियं तदा क्षणं जननीं तां प्रणयेन मोहयन् । स्तनमम्ब दिशेत्युपासजन् भगवन्नद्भुतबाल पाहि माम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக உனது தாய் நல்ல ஞானம் அடைந்தாள். சற்று நேரம் அதே மயக்க நிலையில் இருந்த அவளை, நீ மீண்டும் தெளிய வைத்தாய். அதன் பின்னர், “அம்மா! பசிக்கிறது! பால் தருகிறாயா?”, என்று எதுவும் அறியாதவன் போல் அவள் மடியில் அமர்ந்தாய். அற்புதமான குழந்தையே! என்னைக் காப்பாற்ற வேண்டும்.***