Sriman Narayaneeyam - Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம் (ச்லோகம் 475)

Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம்

விகஸத் புவநே முகோதரே நநு பூய: அபி ததாவிதாநந: அநயா ஸ்புடமீக்ஷிதோ பவாநநவஸ்தாம் ஜகதாம் பதாதநோத் விகஸத் புவநே முக உதரே நநு பூய: அபி ததா வித ஆநந: அநயா ஸ்புடம் ஈக்ஷித: பவாந் அநவஸ்தாம் ஜகதாம் பத ஆதநோத் विकसद्भुवने मुखोदरे ननु भूयोऽपि तथाविधाननः । अनया स्फुटमीक्षितो भवाननवस्थां जगतां बतातनोत्

குருவாயூரப்பா! இப்படியாக உனது வாய்க்குள் அனைத்து உலகங்களையும் கண்டாள். அவை அனைத்தும் உனது முகத்தில் ப்ரகாசமாக இருந்தன. மேலும் உனது வாய்க்குள் மீண்டும் நீ நிற்பதாகவும், அந்த வாய் திறந்தும், அதற்குள் மீண்டும் நீ நிற்பதும் போன்றும், இப்படித் தொடர்ச்சியாக நீ தெரிந்தாய். நீ முடிவற்றவன் என்று உணர்த்தினாய் போலும்.