Sriman Narayaneeyam - Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம் (ச்லோகம் 474)

Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம்

கலசாம்புதி சாயிநம் புந: பர வைகுண்ட பதாதிவாஸிநம் ஸ்வபுரச்ச நிஜார்பகாத்மகம் கதிதா த்வாம் ந ததர்ச ஸா முகே கலச அம்புதி சாயிநம் புந: பர வைகுண்ட பத அதிவாஸிநம் ஸ்வ புர: ச நிஜ அர்பக ஆத்மகம் கதிதா த்வாம் ந ததர்ச ஸா முகே कलशाम्बुधिशायिनं पुनः परवैकुण्ठपदाधिवासिनम् । स्वपुरश्च निजार्भकात्मकं कतिधा त्वां न ददर्श सा मुखे

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மேலும் அவள் நீ திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவனாக உள்ளதைக் கண்டாள்; பரமபதமான ஸ்ரீவைகுண்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்; தன்னுடைய குழந்தையாகத் தென்படுவதையும் கண்டாள். இப்படியாக உன்னைப் பலவிதமாகக் கண்டாள் அல்லவா?