Sriman Narayaneeyam - Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம் (ச்லோகம் 472)

Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம்

அபி ம்ருல்லவ தர்சநோத்ஸுகாம் ஜநநீம் தாம் பஹு தர்பயந்நிவ ப்ருதிவீம் நிகிலாம் ந கேவலம் புவநாநி அப்யகிலாந்யதீத்ருச: அபி ம்ருல் லவ தர்சந உத்ஸுகாம் ஜநநீம் தாம் பஹு தர்பயந் இவ ப்ருதிவீம் நிகிலாம் ந கேவலம் புவநாநி அபி அகிலாந் அதீத்ருச: अपि मृल्लवदर्शनोत्सुकां जननीं तां बहु तर्पयन्निव । पृथिवीं निखिलां न केवलं भुवनान्यप्यखिलान्यदीदृशः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது வாயில் கொஞ்சம் மண் இருக்கும் என்று உனது தாய் நினைத்தாள். ஆனால் அவளது எதிர்பார்ப்பை நீ முற்றிலுமாக பூர்த்தி செய்ய வேண்டும் என்று எண்ணினாய். எனவே, பூமியை மட்டும் அல்லாமல் அனைத்து உலகங்களையும் உனது வாயில் தெரியும்படி செய்தாயாமே?